சுண்டை அல்லது பேயத்தி, மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
Sale!
Plants
Solanum torvum/Turkey Berry/சுண்டைக்காய்
₹60.00
சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள் குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன.
சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும் கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும்.
Availability: 3 in stock
Reviews
There are no reviews yet.